×

ஆன்மீக துளிகள்

* 108 நாகர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஒரு பாம்பு உடல் எங்கும் 108 சிறு நாகங்களை இடமாக கொண்ட மகா நாகத்தின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது.

* தில்லை நடராஜர் பீடபெட்டகத்துள் உள்ள ஸ்படிக லிங்க சிவலிங்க மூர்த்திக்கு அழகிய சிற்றம்பல முடையார் என்றும் சந்திரமௌலிஸ்வரர் என்பர்.

* அம்பிகை அருகில் முருகன் குகாம்பிகை: கற்சிற்பமாக திருக்கடையூர், திருமேனி பல்லவனீச்சரம், இடுப்பில் முருகன், வழுவூர், திருப்பனந்தாள், ஆரூர், திருப்புறம்பயம்.

* நீளவட்ட வடிவ சிவாலயம்: தமிழ்நாட்டில் -1 தான். காஞ்சி ஜூரஹரேசுவரர் ஆலயம் அடித்தளம் தொடங்கி சுவர்கள் விமானம் உச்சியான கபாலக்கல் வரை நீளவட்டமாகவே அமைந்துள்ளன. உச்சியில் 3 கலசம் உள்ளன.

* கங்காளர்: அந்தகாசுரனின் இரத்தம் வற்றி தோல் சுருங்கி எலும்புக் கூடாகிய உடலை சுமந்து கொண்டு மூவுலகிலும் திரிந்த கோலமே கங்காளர் என போற்றப்படுகிறது.

* திருக்கொள்ளம்பூதூர்: அன்பர்களின் தாகத்தை தீர்த்து வைக்க பெருமான் குளம் வெட்டினார். அதிலிருந்து அம்பிகை தாகத்தை தணித்தார். இறைவன் குளம் கண்ட மகாதேவர், அம்பிகை மென்முலை
நாச்சியார்.

* திருக்கடம்பூர்: இந்திரன் ரதம் சக்கரம் குதிரையுடன் விமானம் கருவறையை அகழ்ந்து எடுத்துசெல்ல முயன்றபோது விநாயகரை நினைக்காததால் அழுந்திய ரதத்தை எடுக்கமுடியாமல் விட்டதால் கரகோயிலானது.

* திருப்புகலூர் சோமாஸ்கந்தர் உற்சவர் மேனி அம்பாள் திருகரத்தில் நந்தி; அக்னி 2 முகம், 7 கரகங்கள், 3 திருவடிகள், 4 கொம்புகள், 7 ஜீவாலைகளுடன் கூடிய உருவம்.

* குன்றக்குடி ஈசன் திருவடிகண்டேன் என்று பிரம்மா சொன்ன பொய்ப் பாவம் தீர்ந்த இடம் சூரியனை விட்டு பிரிந்த உஷாதேவி முருகன் அருளால் திரும்ப பெற்றான்.

* திருவானைக்கா: கும்பகர்ணனை கொன்ற தோஷம் நீங்க ராமன் குளம் அமைத்து லிங்க பிரதிஷ்டை தெற்கு பிராகாரத்தில் 108 லிங்கத்தில் 1-ல் முருகனும்
1-ல் விநாயகர் உருவம் உள்ளது.

* துவாதச ஆதித்ய வீதி: திருச்செங்காட்டாங்குடியில் துவாதச ஆதித்யர்கள் சிவலிங்கப்பெருமானை வணங்கிப் பேறு பெற்றார்கள். அவர்கள் பெயரால் இவ்வூரின் மேற்குவீதி துவாதச ஆதித்ய வீதி என அழைக்கப்பெற்றது.

* பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமி அன்னலட்சுமி என்பர். சிந்தாதேவி எனும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அமுத சுரபியை அளித்தவள்.

தொகுப்பு- அருள்ஜோதி

The post ஆன்மீக துளிகள் appeared first on Dinakaran.

Tags : 108 ,Thiruvotiyur Thyagaraja Swamy ,
× RELATED எப்.சியும் எடுக்கவில்லை சைரன் இல்லாத...